டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

விரிவடைந்து வரும் ஐ.டி துறையில், டேட்டா சயன்ஸ், மெஷின் லேர்னிங் துறையில் 50,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை, காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றின் மூலம் இது கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டேட்டா சயன்டிஸ்ட் பணிக்கான தேவை கடந்த 2017-ம் ஆண்டில் உச்சத்தில் இருந்துள்ளது.
இணையம் அறிமுகமான காலந்தொட்டே புதுப்புது துறைகளும், அவற்றுக்கான வேலைவாய்ப்புகளும் வளர்ந்துவருகின்றன. இணையத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சியாக சமூக வலைதளங்கள் அதிகரித்துவருவதால், உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான தகவல்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களைத் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள், ஆய்வுகளை நடத்த டேட்டா சயின்ஸ் உதவுகிறது. உலக அளவில் டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் துறைகளில் 12% வேலைவாய்ப்புகளை இந்தியா நிரப்புகிறது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமர்ஸ், ஹெல்த்கேர் மற்றும் மீடியா துறைகளில் டேட்டா சயன்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் பணிகளுக்கான வாய்ப்புகள் மிகுதியாக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டில், வங்கிகள் மற்றும் நிதித்துறைகளில் மட்டும் டேட்டா சயன்டிஸ்ட் மற்றும் அனலிஸ்ட் பணிகளுக்கான தேவை 44% இருந்தது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் 39,000 அனலிடிக்ஸ் பணியிடங்கள், சைபர் செக்யூரிட்டி துறையில் 5,000 பணியிடங்கள், ஹெல்த்கேர் துறையில் 15,000 பணியிடங்கள் உருவாகக்கூடும் என்றும் தெரியவருகிறது. எனவே இவற்றை கணக்கில்கொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்வது வேலைதேடுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Source:https://www.vikatan.com/news/india/139969-job-opportunities-in-data-science.html

Comments

Popular posts from this blog

LIVEWIRE -RAMNAGAR

8 Top Technology Trends for 2019 and the Jobs They’ll Create